Tuesday, May 24, 2016

தாயாரை விற்கலாமா??????




Pic courtesy 
/mahaperiyavaa.wordpress.com   SAI SRINIVASAN 


ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் தாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?‘ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.
தொண்டர்களுக்கு புரியவேயில்லை.
தாயாரை-வயதான தாயாரை-ஏன் விற்கணும்? விற்றாலும் யார் வாங்குவார்கள்? தாயாரை விற்றதாக கேள்விப்பட்டதில்லையே?’தாயாரை விற்க கூடாதுஎன்று எல்லோரும் ஒருமுகமாக கூறினார்கள்.
அப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்துண்டு இருக்கு. எந்த மாநிலத்தில்? ஹிமாச்சல் பிரதேசத்திலா? அருணாச்சல் பிரதேசத்திலா? நம்ம தமிழ் நாட்டில் தான்…...
தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது. வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்…’
பெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டு பேசியதை, ஆண்டாண்டு காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கேட்டதில்லை.
கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்அநியாயம்சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.
பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் பஞ்சகவ்யம் ஈஸ்வர பூஜைக்கு தேவையானவை.
பசுக்களிடம் எல்லை இல்லாத பாசம் பெரியவாளுக்குஅவற்றை கண்டால்

கோகுலத்து கண்ணனாகவே மாறி விடுவார்கள்

0 comments:

Post a Comment