Showing posts with label help ghosala. Show all posts
Showing posts with label help ghosala. Show all posts

Tuesday, April 19, 2016

கரிசனம் காட்டுங்கள் ஐந்தறிவு உயிர்களிடம்!




 'இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் வெல்பேர்' என்ற பெயரில், கால்நடை பராமரிப்பில் ஈடுபட்டு வரும், டாக்டர் சாதனா ராவ்: என் தாத்தா மிகப்பெரிய பசுமடத்தை பராமரித்து வந்தார். எனவே, சிறுவயதிலேயே கால்நடைகள் மீது பிரியம் கொண்டேன். எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பை முடித்தவுடன், கால்நடை பராமரிப்பில் என் பணிகளை துவக்கினேன். ஆரம்பத்தில், ஆதர வற்ற சில பசுக்களை வீட்டிலேயே வைத்து வளர்த்தேன். பசுக்களின் எண்ணிக்கை, 60ஐ தாண்டியபோது, அதற்கென தனி இடம் தேடி, மயிலாப்பூரில் பசுமடம் அமைத்தேன். புளூ கிராஸ் அமைப்பு மற்றும் கோவில்களில் இருந்து ஒப்படைக்கப்பட்ட மாடுகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட பால் கறவை நின்ற மாடுகள் என, என் பசுமடம் விரிவடைந்தது. தற்போது, நீலாங்கரை, மெப்பேடு, திருவள்ளூர் - வெங்கடாபுரம், திருப்போரூர் என, நான்கு பசு மடங்களில், 1,200க்கும் மேற்பட்ட பசுக்களை, 100 பணியாளர்களுடன் பராமரித்து வருகிறேன். அநாதரவாகத் திரியும் மாடுகளைக் கண்டால், அருகில் உள்ள பசுமடங்களில் ஒப்படையுங்கள். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பல மாடுகளை நாங்கள் மீட்டு வைத்துள்ளோம். அரசு ஏதேனும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால், உதவியாக இருக்கும்.இறைச்சி தேவைக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் தினமும், ஆயிரக்கணக்கில் மாடுகள், தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன. மாடுகள் கடத்தப்படும் தகவல், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கிடைத்தால், காவல்துறை உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கி விடுவேன். இதனால், கொலை மிரட்டல் வரை வந்தாலும், கவலைப் படுவதில்லை.பசுக்களுக்கு உணவளிப்பது மகா புண்ணியம். அதேசமயம், வீட்டில் மீதமாகும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் கொடுக்கலாம்; அழுகியது வேண்டாம். எக்காரணம் கொண்டும், அரிசி சாப்பாடு கொடுக்க வேண்டாம். அது, பசுவுக்கு வயிற்றில் அசிடிட்டியை உண்டாக்கும்.அகத்திக்கீரை கொடுக்கும்போது, கனமான தண்டுகளை தவிர்த்து, கீரை கட்டை பிரித்து, சற்று மெல்லிய தண்டுகளை மட்டும் கொடுக்கவும். இல்லையெனில், மாடு மெல்லும் போது தண்டுகள் உடைந்தாலும், அது கூராக இருந்தாலும், பசுவின் வயிற்றை கிழித்துவிடும்.மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் முன், உடல் மரத்துப் போக ஊசி போட்டு, வெட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அச்சம் காரணமாக, அட்ரினாலின் என்ற ஹார்மோன் அதற்கு அதிகமாக சுரந்து, அந்த மாமிசத்தை உண்ணும் மக்களுக்கு தான், தீங்கு வரும். ஒரு தேசம் எத்தகையது என்பதை, அந்நாட்டு மக்கள், மிருகங்களை நடத்தும் விதத்தை வைத்தே கூறலாம் என்பர்; கரிசனம் காட்டுங்கள், அந்த ஐந்தறிவு உயிர்களிடம்.

பசு என்றால் நாட்டுப் பசுதான்!






மானிட வர்க்கத்தின் ச்ரேயசுக்காக தெய்வத்தினால் ப்ரத்யேகமாக ச்ருஷ்டிக்கப்பட்ட புனிதமான ப்ராணி பசு. நாட்டுப் பசுவின் ஒவ்வொரு அங்கத்திலும் பகவான் புனிதத்தன்மை அமைத்திருப்பதுடன், சாணம், சிறு நீர் உடலிலிருந்து பரவும் காற்று,குளம்படி தூசு இவைகளின் மூலமாகவும் நம் ஆரோக்யம், மன உயர்வு வ்ருத்தியாகின்றன.பசுக்களை சாஸ்திர ரீதியாக ஆராதித்து வருவதால் நாம் பல புண்யங்களை அடைவதுடன் மனித யாத்திரையில்  சில சலுகைகளும் அடையப் பெறுகிறோம்.அருகம்புல்லை உணவாக ஏற்கும் பசுக்களின் சாணம் மிக சக்தி வாய்ந்தது. இந்த சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் விபூதி நம் ஆரோக்யத்துக்கும் புனிதத்துவத்துக்கும் உதவுவதுடன் மாந்த்ரீகத்துக்கும் பயன்பட்டு வந்தது.இத்தகைய விபூதியை சாதுக்கள் ஸ்பர்ஸத்தின் மூலம் நாம் ஏற்றால் நம் குறைகள் யாவும் நீங்கிவிடும்.பசுஞ்சாண வரட்டிகள் மூலமும் ,சில மரத்தின் சமித்துகள்
மூலமாகவும் மந்த்ர பூர்வமாக வளர்க்கப் படும் அக்னி பூஜை கண்களைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தவை.நமது ஆகார சத்துக்கள் எந்த விகிதாசாரத்தில் 
இருக்க வேண்டுமோ, அவை பசும்பால் ஒன்றிலேயே பகவான் அமைத்திருக்கிறார் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் தன்னை கோபாலன் என்று சொன்னதிலிருந்தே பசுக்களின் முக்யத்துவத்தை நாம் உணரவேண்டும்.